நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் தொடர்ந்து அறுத்து செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் வெங்கடேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா/55.இவரது கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டு வேலை செய்து வரும் இவர் மாலை அம்பத்தூர் ராம்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த ஒரு சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலியை அறுத்துச் சென்றனர்.

இது குறித்து லலிதா போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் நேற்று ஆவடி அருகே அன்னனூரில் சாலையில் நடந்து சென்ற மங்கையர்க்கரசி என்ற பெண்ணிடம் தங்க சங்கிலி என நினைத்து கவரிங்க் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அடுத்தடுத்து கொரோனா ஊரடகங்கை பயன்படுத்தி ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com