”பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்து ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தினார்கள்” - ஜேசிடி பிரபாகர்

”பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்து ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தினார்கள்” - ஜேசிடி பிரபாகர்

”பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்து ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தினார்கள்” - ஜேசிடி பிரபாகர்
Published on

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக ஒ.பன்னீர்செல்வதின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இபிஎஸ் - ஓபிஎஸ் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன்ஒற்றை தலைமைக்கு இடம் இல்லை என்று பேட்டியில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி, இப்போது நிர்வாகிகள் அவர் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி பொதுக்குழு, செயற்குழுக்கூட்டம் நடந்தது. அதிமுக ஓபிஎஸ் - இபிஎஸ் கட்சி அல்ல; தொண்டர்கள் கட்சி. ஓபிஎஸ்க்கு இவ்வளவு பிரச்னை நடத்த போது, இபிஎஸ் ஏன் அமைதியாக இருந்தார்? இபிஎஸ் கண் அசைவுக்கு தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் வரவு செலவு, கணக்குகளை படிக்க அனுமதிக்காதது ஏன்?

கோட்டையில் இருப்பவரை வீட்டுக்கு அனுப்பாமல், வீட்டில் இருக்கும் ஒருவரை வழியில் அனுப்புகிறார்கள். ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ்-யை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள். பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்துவிட்டனர்; ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். கண்ணிய குறைவாக நடந்துகொண்டவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்தாரா? ஒற்றைத் தலைமை என ஏற்கெனவே சொல்லித் தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். பொதுக்குழு கூட்டம் கண்ணியமாக நடத்தப்படவில்லை. பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும் என்று கூறினார்.

மேலும் CV சண்முகம், ஒருக்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி பற்றிய கேள்விக்கு, விதிகள் பற்றி முடிவு எடுக்க வழக்கறிஞர் குழு பார்த்துக்கொள்ளும்; நான் கட்சியின் தலைவிதியை பற்றி கவலைப்படுகிறேன். தேர்தல் கமிஷன் எந்த புகாரும் கொடுக்கவில்லை. அதிமுக பொன் விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். அது உட்பட 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனை சர்வாதிகாரம் என்று சொல்ல மாட்டேன். பதவி வெறி என்றுதான் சொல்லவேண்டும் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com