JCD Prabhakar elected as assembly president in TVK Govt
ஜே.சி.டி.பிரபாகர்x page

"எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால்..” சபாநாயகரின் அரசியல் பாதையை நினைவுகூரும் ஆர்வலர்கள்!

இவரது திறமையைக் கண்டுவியந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், 1978-லேயே இவரை அம்பத்தூர் நகரிய உறுப்பினராக உயர்த்தி அழகு பார்த்தார்.
Published on

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.சி.டி.பிரபாகரின் அரசியல் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம்... 

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள 72 வயதாகும் ஜே.சி.டி.பிரபாகர் நீண்ட அரசியல்கொணடவர். 1952-இல் திண்டுக்கல்லில் பிறந்த இவர், லயோலா கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் தலைவராகத் தடம்பதித்தவர். 1972-இல் அதிமுக உருவானபோதே அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரது திறமையைக் கண்டுவியந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், 1978-லேயே இவரை அம்பத்தூர் நகரிய உறுப்பினராக உயர்த்தி அழகு பார்த்தார்.

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகையில், "எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால், ஜே.சி.டி.பிரபாகரனுக்குத்தான் மணமுடித்துக் கொடுத்திருப்பேன்” எனக் கூறியதை அரசியல் அனுபவஸ்தர்கள் இன்றும் நினைவுகூர்ந்து வியக்கின்றனர். வில்லிவாக்கம் தொகுதியில் 5 முறைபோட்டியிட்டு இருமுறை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2011 தேர்தலில் திமுகவின் ஜாம்பவான் பேராசிரியர் அன்பழகனையே தோற்கடித்தவர். 2016-இல் கொளத்தூர்தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினையே எதிர்த்துப் போட்டியிட்டவர். சட்டம் பயின்றவர், சிறந்த விளையாட்டு ஆர்வலர், தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் வல்லவர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஜே.சி.டி.பிரபாகரன், தற்போது தவெகவின் முக்கியத் தூணாக மாறி, தமிழகச் சட்டப்பேரவையை வழிநடத்தும் சபாநாயகர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com