\
ஜாஸ் சினிமாஸ் இன்று முதல் செயல்படும்

ஜாஸ் சினிமாஸ் இன்று முதல் செயல்படும்

ஜாஸ் சினிமாஸ் இன்று முதல் செயல்படும்
Published on

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலிலுள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவன திரையரங்குகளில் இன்று முதல் காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 9ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சோதனைகள் நிறைவடைந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமான வரித்துறை சோதனை காரணமாக பீனிக்ஸ் மாலிலுள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவன திரையரங்குகளில் கடந்த 4 நாட்களாக முன்பதிவு மற்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் திரைப்படங்கள் திரையிடப்படும் என்றும் இணையதளம் மூலம் முன்பதிவும் செய்துகொள்ளலாம் என ஜாஸ் சினிமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com