\
குடியாத்தம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு பூட்டு

குடியாத்தம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு பூட்டு

குடியாத்தம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு பூட்டு
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்படுள்ளார். அதையொட்டி அலுவலகம் முன் கூடிய சிலர் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். வேறு சிலர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது இரு தரப்பினரும் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனிடையே வாக்குவாதம் வலுத்தது. உடனே அங்கு காவல்துறையினர் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அதிமுகவினரை அப்புறப்படுத்திய காவல்துறையினர், வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினர். இச்சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com