\
முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு.. தீபா பதில்

முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு.. தீபா பதில்

முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு.. தீபா பதில்
Published on

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்றும் தனியாக நின்றுகூட போராடுவேன் எனவும் கூறியிருந்தார். இதனிடையே, அரசியலில் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். தற்போதைய சூழலில் தன்னால் எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ள அவர், தன்னுடைய நிலையை விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சரை சந்திப்பது குறித்து இனிமேல் தான் முடிவு செய்யப்படும் என கூறியுள்ள தீபா, தன்னைப்பற்றி வரும் யூகங்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com