தமிழ்நாடு
மருத்துவமனையில் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்-விசாரணை ஆணையம்
மருத்துவமனையில் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்-விசாரணை ஆணையம்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்றைய விசாரணையின்போது, ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த ராமலிங்கம் ஐஏஎஸ் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, தனது உடல் நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கையொப்பமிட்ட கடிதத்தை மருத்துவர் மூலமாக பெற்று அனுப்பியதாக தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாகவும், ராமலிங்கம் தெரிவித்ததாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.