“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்

“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்

“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். சிலர் முரண்பட்ட கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரத்தில் தங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை என்று கூறும் அமைச்சர்கள், திட்டமிட்டே அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும் இதே குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார். 

இந்நிலையில், 2017 பிப்ரவரி 6இல் ரிச்சர்ட் பீலே பேசியபோது ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்று பீலே தெரிவித்து இருக்கிறார். மேலும், “அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு இயன்ற அளவுக்கு சிறப்பான சிகிச்சையே அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால் 2016 நவம்பர் 2க்குப் பிறகு என்னை அழைக்கவில்லை” என்றும் அந்த வீடியோ பதிவில் பீலே கூறியிருக்கிறார். 

முன்னதாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் இதே கருத்தினை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com