அப்போலோ நிர்வாகத்துக்கு ஜெ. விசாரணை ஆணையம் எச்சரிச்கை

அப்போலோ நிர்வாகத்துக்கு ஜெ. விசாரணை ஆணையம் எச்சரிச்கை

அப்போலோ நிர்வாகத்துக்கு ஜெ. விசாரணை ஆணையம் எச்சரிச்கை
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை என்றால் மருத்துவமனை நிர்வாக‌ம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ நிர்வாக‌த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பி அப்போலோ மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சில மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த நேரத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் அப்‌போலோ ‌மருத்துவர்கள் உறுதியாக ஆஜாராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அ‌ப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக ‌மருத்துவமனை பல கோடி ரூபாய் பெற்றுள்ளது என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை அப்போலோ இயக்குனர்களுக்கும் பொருந்தும் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், அப்போலோ தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா உள்ளிட்ட மருத்துவர்கள் வரும் நாட்களில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com