69ஆவது பிறந்த நாள்..... 69 லட்சம் மரக்கன்றுகள்

69ஆவது பிறந்த நாள்..... 69 லட்சம் மரக்கன்றுகள்

69ஆவது பிறந்த நாள்..... 69 லட்சம் மரக்கன்றுகள்
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழம்பு மரக்கன்றை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்னன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ள‌‌தாகவும். 13 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com