டிசம்பர் 4 அன்றே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன் திடீர் தகவல்

டிசம்பர் 4 அன்றே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன் திடீர் தகவல்

டிசம்பர் 4 அன்றே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன் திடீர் தகவல்
Published on

2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.75நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் உயிரிழந்தார் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது. அவர் மரணமடைந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திவாகரன் “2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார். ஜெயலலிதா இறந்ததை ஏன் அறிவிக்கவில்லை என அப்போலோ நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டேன். தமிழகத்தில் அப்போலோ மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என நிர்வாகம் கூறியது. அப்போலோ மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கபட்டது” என பேசினார். திவாகரனின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com