\
மூச்சுத் திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு

மூச்சுத் திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு

மூச்சுத் திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு
Published on

மூச்சுத் திணறலுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோ விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடியோவை மருத்துவர்  சிவக்குமார் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

மூச்சுத்திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசிய அந்த ஆடியோ பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

மேலும், அப்போலோ மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமக்கு தேவையான உணவு பற்றி ஜெயலலிதா தனது டைரியில் எழுதியுள்ளார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி ஜெயலலிதா கைப்பட எழுதிய அந்த உணவுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com