\
ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் அப்போலோவிலிருந்து ஜெ. எழுதிய கடிதம்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் அப்போலோவிலிருந்து ஜெ. எழுதிய கடிதம்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் அப்போலோவிலிருந்து ஜெ. எழுதிய கடிதம்
Published on

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் தமது கையெழுத்துடன் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியது தெரியவந்துள்ளது.

வித்யாசாகர் ராவின் ஓராண்டு பணி குறித்து வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் அந்த கடிதத்தின் நகல் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விசாரித்து அறிந்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதாவின் கையெழுத்துடன் 23 ஆம் தேதியிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வித் பெஸ்ட் விஷ்ஸஸ் என ஜெயலலிதா கைப்பட எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் என்பது தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com