ஜெயலலிதாவின் கால் அகற்றப்படவில்லை

ஜெயலலிதாவின் கால் அகற்றப்படவில்லை

ஜெயலலிதாவின் கால் அகற்றப்படவில்லை
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்புகளும் அகற்றப்படவில்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து சென்னையில் மருத்துவர் குழு விளக்கமளித்தது. ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கின் போது அவரது உடல் உயரம் குறைந்ததாகவும், இதனால் அவரது கால்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் குழு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்றும், அவருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com