\
லண்டன் செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை

லண்டன் செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை

லண்டன் செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை
Published on: 

உயர்சிகிச்சைக்காக லண்டன் செல்ல முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர் சந்திப்புக்கு சென்னை தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவை லண்டனுக்கு அழைத்துச் சென்று ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ரிச்சர்ட் பீலே, சிகிச்சைக்காக லண்டன் செல்வது குறித்து மருத்துவர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயலலிதாவிடம் கூறியபோது, அவர் லண்டன் செல்ல விரும்பவில்லை என தெரிவித்ததால் அந்த ஆலோசனை கைவிடப்பட்டதாக ரிச்சர்ட் பீலே தெரிவித்தார். அப்போலோவிலேயே உலகத் தரம்வாய்ந்த சிகிச்சைக்கு இடம் இருந்ததால் லண்டன் செல்லவில்லை என்றும் ரிச்சர்ட் மேலும் விளக்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com