ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜரானார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சசிகலா குடும்பத்தினர் உட்பட பலரும் ஆஜராகி தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளித்துவருகின்றனர். அத்துடன் அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் உதவியாளராக 17 ஆண்டுகள் பணியாற்றிய பூங்குன்றன், 2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை போயஸ் கார்டனில் பணியாற்றவர்களின் பட்டியலை, கடந்த 2ஆம் தேதி விசாரணை ஆணையத்திடம் அளித்தார். இந்நிலையில்
இன்று நேரில் ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.