ஜெயலலிதாவின் வாழ்க்கைத் திரைப்படம் ‘தலைவி’

ஜெயலலிதாவின் வாழ்க்கைத் திரைப்படம் ‘தலைவி’
ஜெயலலிதாவின் வாழ்க்கைத் திரைப்படம் ‘தலைவி’

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள திரைப்படத்திற்கு ‘தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்து சென்றிருப்பவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. திரைப்படம் கதாநாயகியாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், பின் நாளில் அதிமுகவின் இணைந்து அரசியலில் குறிப்பிடத் தகுந்த பெயரைப் பெற்றார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர், பல போராட்டங்களைக் கடந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதன்பின்னர் தனி ஒரு பெண்ணாக இருந்து முதலமைச்சராகி, தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார். கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலம் குன்றிய அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குநர் விஜய்  திரைப்படத்தை எடுக்கிறார். இதை விஷ்னு வர்தன் இந்துரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைக்கவுள்ளார். படத்திற்கு ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதற்காக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை அவரது தொண்டர்கள் ‘புரட்சித் தலைவி’ என அழைத்ததால், அதிலிருந்து ‘தலைவி’ என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com