“வந்தாரு.. போனாரு.. ரிப்பீட்டு; டிவியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான்” - ஜெயக்குமார்

“வந்தாரு.. போனாரு.. ரிப்பீட்டு; டிவியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான்” - ஜெயக்குமார்

“வந்தாரு.. போனாரு.. ரிப்பீட்டு; டிவியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான்” - ஜெயக்குமார்
Published on

மறைமுக தேர்தலின் போது திமுகவினர் கவுன்சிலர்களை விலைக்குவாங்க முயற்சிப்பார்கள். அதில், அதிமுகவினர் விலைபோனால் அது மன்னிக்க முடியாத குற்றம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''தாலிக்கு தங்கம் , பள்ளி குழுந்தைகளுக்கான விலையில்லா உபகரணங்கள் , மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர், இயற்கை பேரிடரின்போது நடைபெற்ற நிவாரணப் பணிகள், மகளிர் நீதிமன்றம் போன்றவற்றை எடுத்துக்கூறி அதிமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக ஆட்சியின் அவலநிலையை எடுத்து கூறி, நிறைவேற்றப்படாத திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்பு பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர் .

உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற அதிமுக திட்டங்களை மோசடி செய்து திமுக தனது திட்டமாக கூறி வருகிறது. தொலைக்காட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான் வருகிறார். வந்தாரு ...போனாரு ..ரிப்பீட்டு என்பதுபோல ஸ்டாலின் படம்தான் மீண்டும் மீண்டும் வருகிறது. 2006 ல் திமுக காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் 87 வார்டில் கலவரம் நடந்தது , நீதிபதி வாக்கையே யாரோ செலுத்தி விட்டனர். எனவே அங்கெல்லாம் மறு தேர்தல் நடந்தது.

பூத் ஏஜெண்ட் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும். மாலை5 முதல் 6 மணிக்கு கவனதாக இருக்க வேண்டும். பூத் ஏஜெண்ட் 1 லட்சம் கொடுத்தாலும் மூஞ்சியில் தூக்கி வீசுபவர்களாக ஏஜெண்ட் இருக்க வேண்டும். தேர்தல் முடிவு வெளிவந்து , மறைமுக தேர்தலுக்கு 10 நாள் இடைவெளி இருப்பதால் கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்தி திமுகவினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பார். கட்சியினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம். அவ்வாறு செய்து மக்கள் காறித் துப்பும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com