“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” அண்ணாமலையை கடுமையாக சாடி, கட்சி நிலைப்பாட்டை அறிவித்தார் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால் நிச்சயமாக எந்த அதிமுக தொண்டரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

பலமுறை பாஜக-வுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளோம். இப்போது பாஜக, அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும் போதுதான் முடிவெடுக்க முடியும்” எனக்கூறினார். தொடர்ந்து அண்ணாமலையையும் கடுமையாக சாடினார். முழு தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com