`சிலர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள்’- ஜெயகுமார் சூசக விமர்சனம்!

`சிலர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள்’- ஜெயகுமார் சூசக விமர்சனம்!
`சிலர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள்’- ஜெயகுமார் சூசக விமர்சனம்!

“ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். ஆளுநர் புகார் மீது தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத்திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், வளர்மதி, கடம்பூர் ராஜா உட்பட பல அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், “ஆளுநர் விவவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழர் பண்பாடு, அண்ணாவை பின்பற்றுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்... ஒருமையில் பேசுவது தான் தமிழர் பண்பாடா? அண்ணா ஒருபோதும் தனக்கு எதிர்நிற்பவர் மேல், விமர்சனங்களை வைக்கவோ, கடுஞ்சொற்களை பிரயோகிக்கவோ மாட்டார். இவ்விஷயத்தில் கோபத்தை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும்.

மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருக்கிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசுவதற்கு தான் ஆளுநர் டெல்லி சென்றிருக்கிறார். ஆனால் திமுக கொடுத்த புகாரின் அடிப்படியிலேயே, ஆளுநர் விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்தி வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை குறித்து பேசிய அவரிடம் `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் கேள்விக்கு, “சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு. தமிழக மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லை. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் எல்லோரும் மரியாதையோடும், தமிழர்களின் பண்பாடோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், “சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள், கோவப்படுகிறார்கள், நிரூபர்களை திட்டுகிறார்கள், அப்படியும் ஒரு குரூப்பு இருக்க தான் செய்யுது” என்றார். அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார் என சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com