ஜனவரி 14-ஆம் தேதியும் பொங்கல் விடுமுறை

ஜனவரி 14-ஆம் தேதியும் பொங்கல் விடுமுறை

ஜனவரி 14-ஆம் தேதியும் பொங்கல் விடுமுறை
Published on

ஜனவரி 14-ஆம் தேதியான போகிப் பண்டிகை அன்று தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையானது இந்த ஆண்டு செவ்வாய்கிழமை வருகிறது. பொங்கல் பண்டிகைகையொட்டி ஏற்கெனவே ஜனவரி 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகள் விடுமுறைதான். அதேபோன்று 12 மற்றும் 13-ஆம் தேதிகளும் சனி மற்றும் ஞாயிறு ஆக உள்ளதால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் அன்று விடுமுறையாகத்தான் இருக்கும். அதேசமயம் இடையில் 14-ஆம் தேதி மட்டும் விடுமுறை இல்லாமல் இருந்தது.

பொதுவாக பெரும்பாலான மக்கள் பொங்கலுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக ஜனவரி 14-ஆம் தேதியான போகிப் பண்டிகை அன்று தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேமசயம் ஜனவரி 14-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை என்பதால் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்காக கிடைக்கும். இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com