ஜல்லிக்கட்டு: 150 பார்வையாளர்களுக்கு மட்டும்அனுமதி-2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்

ஜல்லிக்கட்டு: 150 பார்வையாளர்களுக்கு மட்டும்அனுமதி-2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்
ஜல்லிக்கட்டு: 150 பார்வையாளர்களுக்கு மட்டும்அனுமதி-2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்டு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலம். தற்போது கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழுந்தநிலையில், நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன், அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதுடன், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளது அவசியம் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளியூரில் வசிப்பவர்கள் இணையவழியாக காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com