மாடுபிடி வீரர்களிடமிருந்து தப்பி மின்கம்பியை மிதித்து உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை

மாடுபிடி வீரர்களிடமிருந்து தப்பி மின்கம்பியை மிதித்து உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை
மாடுபிடி வீரர்களிடமிருந்து தப்பி மின்கம்பியை மிதித்து உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவரது காளையும் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டது.

அப்போது வீரர்களின் பிடியில் சிக்காமல் அந்த காளை தப்பிச் சென்றது. இதையடுத்து பிடிக்க வந்த உரிமையாளரின் பிடியிலும் சிக்காமல் களத்தை விட்டு வெளியேறிய காளை வயல்வெளிக்குள் புகுந்தது.

தொடர்ந்து போக்கு காட்டிய காளை, மேலப்பட்டி என்னுமிடத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உயிரிழந்த காளையின் உடலை தழுவி அழுத காட்சி காண்போரை களங்கடிக்கும் விதமாக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com