சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்
Published on

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள் உள்பட 240 பேரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தங்களது முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com