களத்தில் சீறும் காளைகள்: அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

களத்தில் சீறும் காளைகள்: அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!
களத்தில் சீறும் காளைகள்: அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறி வரும் காளைகளை அடக்குவதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் போட்டி தொடங்கியது. இதில், 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர், 830 காளைகள் களத்தில் உள்ளன. 3 - 8 வயதுடைய காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமில் உள்ள நாட்டின காளைகளாக இருக்க வேண்டும்; காளைகளுக்கு வெளிக் காயங்கள் இருக்க கூடாது; காளைகளுக்கு முழு கண்பார்வை திறன் இருக்க வேண்டும்; ரத்த சோகை பாதிப்பு, சோர்வுள்ள காளைகளாக இருக்க கூடாது முதலான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.காளைகளுக்கு போதை வஸ்து கொடுக்கப்பட்டுள்ளதா என சோதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com