மெரினாவில் 3 கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து இளைஞர்கள் தொடர்ந்து 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டத்தை இயற்றக்கோரி தமிழக எம்பிக்கள் பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அணி அணியாக திரண்டனர். சமூக வலைதளம் வாயிலாக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர், தன்னெழுச்சியாக போராட்டக் களத்திற்கு வந்தனர். இளைஞர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 2 வது நாளாக போராடி வருகின்றனர்.