மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்

மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்

மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்
Published on

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. ஜல்லிக்கட்டுக்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து செல்லத் தொடங்கினர். இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்காக அரசின் நடவடிக்கையை ஏற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த போராட்டத்தினை இளைஞர்கள் கைவிட்டு, அமைதியாக கலைந்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மதுரையில் 7 நாட்களுக்குப் பின்னர் போக்குவரத்து சேவை சீரானது. அரசுப் பேருந்து சேவையும் முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com