கொட்டும் மழையிலும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாத மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் ஜல்லிக்கட்டு போராட்டம் வலுத்து வருகிறது. ஜாதி, மத பாகுபாடின்றி எல்லா மக்களும் ஒரே களத்தில் போராடி வருகின்றனர். இது ஒரு கட்டுக்கோப்பான அறவழி போராட்டம் என்று உலகமே வியக்கும் அளவிற்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், திருவாரூர், பெரியகுளம், திண்டுக்கல், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாத மக்கள், ஜல்லிக்கட்டிற்கான தங்களது போராட்டத்தை மழையிலும் தொடர்ந்து வருகின்றனர். வாடிவாசலை திறந்தால் தான் வீட்டு வாசலை மிதிப்போம் என அவர்கள் ஒற்றை கோரிக்கையாக போராட்டத்தை தொடர்கின்றனர்.