செல்போன் ஒளி மூலம் நூதன போராட்டம்

செல்போன் ஒளி மூலம் நூதன போராட்டம்

செல்போன் ஒளி மூலம் நூதன போராட்டம்
Published on

ஜல்லிக்கட்டிற்கான ஆதரவு அலை தமிழகம் முழுவதும் பரவியுள்ள சுழலில், முதல் போர‌ட்டம் நடந்த தலைந‌கர் சென்னையின் மெரினா கடற்கரை இன்றும் போராட்டக்கோலம் பூண்டுள்ளது.

ஜட்டுக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை விதிக்க வலியுறுத்தியும், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் சென்னை மெரினா கடற்கடையில் காலை முதலே திரண்ட இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த ஏராளமான இளைஞர்கள் கறுப்புச்சட்டை அணிந்து வந்திருந்தனர். இரவு கவிந்தும் போராட்டம் தொடர்ந்த நிலையில் அங்கு மின்சாரம்‌துண்டிக்கப்பட்டதால், செல்போன் டார்ச்சை ஒளிர வைத்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com