\
பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மாணவர் அமைப்பு கோரிக்கை

பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மாணவர் அமைப்பு கோரிக்கை

பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மாணவர் அமைப்பு கோரிக்கை
Published on: 

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய தேசிய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தமிழகத்தின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தரத் தீர்வு கோரி நடந்துவரும் தமிழக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,

* தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட வேண்டும்

*ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த நிரந்தரத் தீர்வு கிட்டும்வரை அனைத்து கல்லூரிகளும் மூடப்பட வேண்டும்.

* போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது கல்லூரிகள் தரப்பில் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டிருந்தால், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com