தமிழ்நாடு
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தீர்வு அல்ல: தமிழிசை விளக்கம்
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தீர்வு அல்ல: தமிழிசை விளக்கம்
ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தீர்வு காண முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிக்கைக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் அவசர சட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘அவசர சட்டம் கொண்டு வந்து அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்றால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வாய்ப்புகள் சுருங்கிவிடும் என்றார். அதனால்தான் இதை மத்திய அரசு எச்சரிக்கையுடன் அணுகுகிறது எனக் கூறினார்.