ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு தாக்கல்
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் கருத்தை கேட்டறியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. ஜல்லிக்கட்டு நடத்த எந்த இடையூறும் ஏற்படமால் இருக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தங்கள் சார்பில் 70 கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசு தரப்பின் கருத்தைக் கேட்காமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.