திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் கோயில் அந்தோணியார் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு வாடிவாசலை அமைத்த அப்பகுதி மக்கள், காலையிலேயே நூற்றுக்கணக்கான காளைகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் ஆக்ரோஷமாக கட்டித் தழுவியதால் ஜல்லிக்கட்டுக்களம் ஆரவாரத்துடன் காணப்பட்டது. இதில் வெற்றி பெற்ற காளையர்களுக்கும், மாடு பிடி வீரர்களிடம் பிடிபடாமல் தப்பித்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதனால் புதுப்பட்டி விழாக்கோலம் பூண்டது.