\
ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் உயிரிழப்பு
Published on: 

ஜல்லிக்கட்டு‌ போராட்டத்தின் போது ரயில் மீது நின்றதால் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெ‌ற்று வந்த யோகேஸ்வரன் இன்று உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் போரட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்தின் போது மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 19ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் மின்சார‌‌ம் தாக்கி படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்று உயிரிழந்தார்.

இதையடுத்து யோகேஸ்வர் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் லாரன்ஸ், அவரின் சகோதரி தனலட்சுமியின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com