உலகம்பட்டியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
உலகம்பட்டி கிராமத்தில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஊர்மக்கள் சார்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. வாடிவாசல் அமைக்கும் பணிகள், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியின் இரண்டு புறமும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகம்பட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டில் திண்டுக்கல் ,திருச்சி, மதுரை , அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை , தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 முதல் 500 காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காளைகளை கட்டித் தழுவ 300 வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர். உலகம்பட்டி ஜல்லிக்கட்டுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.