"சந்திரயான் 2 அபார சாதனை தேசத்துக்கு பெருமை"- சத்குரு ஜக்கி வாசுதேவ்
வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்படும் நிகழ்வில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சாதனை படைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. இந்நிகழ்வில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் சென்றதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு சத்குரு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்ரோ விஞ்ஞானிகளின் புத்திகூர்மை, அசாத்திய உறுதி மற்றும் அரசுடைய நோக்கத்தின் விளைவே சந்திரயான் 2. இந்த அபார சாதனை நம் தேசத்தின் பெருமை. அங்கு இருக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட இயலவில்லை. என் பாக்கியம். அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

