\
வேலை நிறுத்தத்தை கைவிட முதலமைச்சர் வேண்டுகோள்

வேலை நிறுத்தத்தை கைவிட முதலமைச்சர் வேண்டுகோள்

வேலை நிறுத்தத்தை கைவிட முதலமைச்சர் வேண்டுகோள்
Published on

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஊதியம் தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது எனவும் இம்மாத இறுதியில் ஊதியக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசியப்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை அரசு உரிய நேரத்தில் வெளியிடும் எனக் கூறியுள்ள முதலமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com