\
ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Published on: 

தமிழக அரசு ஊழியர்கள் வரும் 22 ஆம் தேதி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் முன் 20 சதவிகித இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் முழுமையாக பங்கேற்பார்கள் என ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர் என்றும் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com