தமிழ்நாடு
பாடம் நடத்திய பயிற்சி ஆசிரியர்களை மிரட்டிய ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்!
பாடம் நடத்திய பயிற்சி ஆசிரியர்களை மிரட்டிய ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பாடம் நடத்திய பயிற்சி ஆசிரியர்களை ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் தேதியிலிருந்து அரசுப்பள்ளி ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், அரசு உதவி பெறும் அந்த பள்ளியில் பயிற்சி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று பள்ளிக்குள் நுழைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாணவர்களை துரத்திவிட்டு, பயிற்சி ஆசிரியர்களையும் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினர். அந்த காட்சிகள் பள்ளியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மாவட்டம் ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளது.