தமிழ்நாடு
ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை
ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இரண்டு தினங்களுக்கு முன்பு 80 சதவீதம் செயற்கை சுவாசம் மூலமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் தேவை தற்போது 29 சதவீதமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பான மனிதர்களைக் காட்டிலும் கூடுதலாக 5 சதவீதம் மட்டுமே செயற்கை சுவாச ஆக்சிஜன் தேவைப்படுகிறது. உடலில் மற்ற செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.