\
நல்லடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்

நல்லடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்

நல்லடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூச்சுத் திணறலால் கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.

இதனையடுத்து, கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்ணம்மாபேட்டையில் தந்தை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக தொண்டர்கள், தெருமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனிடையே அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com