அதிமுக விவகாரங்களில் தலையிடும் எண்ணமில்லை.. வெங்கய்யா நாயுடு
அதிமுக-வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் எண்ணமில்லை என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே குழுமத்தின் சார்பாக சென்னையில் இன்று இரண்டாவது நாளாக ஊடக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதலமைச்சராகவும் பதவியேற்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை வைப்பது தொடர்பாக கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அதிமுக மற்றும் சசிகலா பற்றி கருத்து தெரிவிப்பது சரியானதல்ல என தெரிவித்தார். இதனை, ஊடங்களில் தலைப்புச் செய்திகளாக்கி, அதில் கருத்து தெரிவிக்க காலக்கெடு அளித்தாலும் தனது நிலையில் இருந்து மாற மாட்டேன் எனவும் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் எண்ணமில்லை என கூறிய அவர், தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்கிறார் என்றும் அவரோடு இணைந்து மத்திய அரசு பணியாற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.