RN Ravi
RN Ravifile

ஆளுநர் வருகைக்காக மாணவிகளை வரச்சொல்லி மிரட்டினாரா கல்லூரி முதல்வர்? வைரலாகும் ஆடியோ.. நடந்தது என்ன?

ஆளுநர் வருகிறார் கண்டிப்பாக வரவேண்டும் என மாணவிகளை மிரட்டியதாக பாஜக மாவட்ட தலைவரின் கல்லூரி முதல்வர் மீது புகார் எழுந்த நிலையில், ஆளுநர் வருகை குறித்து நான் பேசவில்லை என கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
Published on

நாகை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனின் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் மிரட்டி வரசொல்லுவது போன்ற ஆடியோ வைரலானது.

audio
audiofile

அதில், கல்லூரி மாணவ மாணவிகள் காலை 6.30 மணிக்கெல்லாம் வரவேண்டும், என கல்லூரி முதல்வர் பேசி இருந்தார். ஆனால் தற்போது வரை மாணவ மாணவிகள் வராமல் கல்லூரி வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேர்வெழுத முடியாது, வருகை பதிவேட்டில் கை வைப்பேன் என மீண்டும் மிரட்டல் ஆடியோவை கல்லூரி முதல்வர் இளவேந்தன் வெளியிட்டார்.

இந்த ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கல்லூரி முதல்வர் இளவேந்தனிடம் கேட்டபோது.. ஆளுநர் வருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. நாகை ஆதர்ஷ் தனியார் பள்ளியில் நடைபெறும் கண் சிகிச்சை முகாமை ஒருங்கிணைப்பதற்காக மாணவர்களை வரச் சொன்னதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com