சென்னை: ஸ்டார் ஹோட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

சென்னை: ஸ்டார் ஹோட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
சென்னை: ஸ்டார் ஹோட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

சென்னையில் உள்ள 25, நட்சத்திர ஹோட்டல்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ.டி.சி சோழா ஹோட்டலில் பணிபுரியும் 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், ஹோட்டல் லீலா பேலஸில் பணிபுரியும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், சென்னையில் உள்ள 25, நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 15 நாட்களுக்குள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  திருமண நிகழ்ச்சி மட்டுமின்றி பிறந்தநாள் விழாக்கள் போன்ற விழாக்களில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com