சென்னையில் 23 இடங்களில் வருமானவரி சோதனை

சென்னையில் 23 இடங்களில் வருமானவரி சோதனை

சென்னையில் 23 இடங்களில் வருமானவரி சோதனை
Published on

சென்னையில் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட 23 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

காந்தி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான குடவுன், பைனான்ஸ் நிறுவனம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. காந்தி ஃபேப்ரிக்ஸ் நிறுவனம் குஜராத்தில் இருந்து துணிகளை இறக்குமதி செய்து சென்னையின் பல்வேறு கடைகளுக்கு விநியோகித்து வருகிறது. இந்த நிறுவனம் கோடை விடுமுறையில் அதிகளவு விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் வரிஏய்ப்பு செய்து துணி வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனடிப்படையில் அந்நிறுவனத்தில் சோதனை நடப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்நிறுவனம் மட்டுமல் லாமல் சென்னையில் உள்ள பிற நிறுவனங்களிலும் வரிஏய்ப்பு புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தியாகராயர்நகர், பாரிமுனை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. மொத்தம் 23 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com