\
நிஜாம் பாக்கு உரிமையாளரிடம் சோதனை - சிக்கியது ரூ.3 கோடி!

நிஜாம் பாக்கு உரிமையாளரிடம் சோதனை - சிக்கியது ரூ.3 கோடி!

நிஜாம் பாக்கு உரிமையாளரிடம் சோதனை - சிக்கியது ரூ.3 கோடி!
Published on

நிஜாம்‌‌ பாக்கு நிறுவன உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற வருமான வ‌ரி சோதனையில், கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்‌ளது.

கமீல் பாட்ஷா என்பவர் நிர்வகித்து வரும் நிஜாம் பாக்கு நிறுவனத்தில் 2ஆவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் பூந்தமல்லி மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை‌யில் ஈடுபட்டுள்ளனர். அதில், கணக்கில் வராத ரூ.3 கோடி பணமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

சென்னையைத் தவிர மதுரை, புதுக்கோட்டையில் உள்ள நிஜாம் பாக்கு நிறுவன அலுவலகங்களிலு‌ம் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யு‌ம்‌ பணிகள் நடைபெற்று வருவதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com