அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அருணை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள். அவரது மகன் வீடு என ஐந்து இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
எவ வேலு
எவ வேலுpt web

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அருணை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அவரதுமகன் கம்பனின் வீடு என 5 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதற்காக, 30 கார்களில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எ.வ.வேலு
எ.வ.வேலுpt desk

சென்னையில் 18 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், நேற்று கிண்டி நெடுஞ்சாலைத் துறை அரசு இல்லத்தில் சோதனை நிறைவு பெற்றது. அதேபோல, அப்பாசாமி கட்டுமான நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் வீட்டில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது. காசா கிராண்ட், அப்பாசாமி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 3ஆவது நாளாக சோதனை தொடர்கிறது.

அதேபோல, விழுப்புரம் கோல்டன் பார்க் மற்றும் கோல்டன் மார்பில் நிறுவன உரிமையாளர் பிரேம்நாத் வீடு மற்றும் நிறுவனங்களிலும் 3ஆவது நாளாக வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com