அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் IT Raid

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எவ வேலு
எவ வேலுpt web

கோவை இராமநாதபுரத்தில் உள்ள திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லம், அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம் ஆகிய 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்கின்றனர். அதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்லூரியிலும் 5 ஆவது நாளாக சோதனை தொடர்கிறது. அமைச்சர் மகனின் வீடு, ஒப்பந்ததாரர் வெங்கட் வீடு, அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. இரவு, பகலாக அங்கேயே தங்கியிருந்து வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com