அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2 ஆவது நாளாக தொடரும் IT Raid

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் 2 ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் நேற்று காலை 6 - 7 மணியளவில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். அதனை தொடர்ந்து எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

எவ வேலு
எவ வேலுpt web

திருவண்ணாமலை சுபலட்சுமி நகரிலுள்ள அமைச்சரின் மகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அத்தோடு, பவளக்குன்று தெருவிலுள்ள ஒப்பந்ததாரர் துரை வெங்கட் வீடு மற்றும் அருணை கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அருணை நிறுவனத்தில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com