சசிகலாவின் உறவினருக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் 5வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் செயல்பட்டு வரும் இந்த ஆலையை, இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் நிர்வகித்து வருகிறார். சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொழிற்சாலை மேலாளர் காமராஜிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அல்லது வரி ஏய்ப்பு ஏதேனும் நடைபெற்றுள்ளதா என அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் அங்கேயே தங்கி சோதனை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.